நிலையான அரசு கமல் விருப்பம்!!! அனைவரும் வாக்களிக்க ரஜினி வேண்டுகோள்!!!

24th of April 2014
சென்னை::நிலையான அரசு அமைய வேண்டும் என்றார் நடிகர் கமல்ஹாசன்.கமல்ஹாசன் நடிகை கவுதமியுடன் வந்து தேனாம்பேட்டையில் திருவள்ளூவர் சாலையில் உள்ள வாக்குசாவடியில் ஓட்டுபோட்டார். பிறகு கமல் கூறும்போது, ‘வாக்களிப்பது ஜனநாயக கடமை. அதை ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டும். தமது அன்றாட பணிகளுக்கு இடையே வாக்களிக்க கண்டிப்பாக நேரம் ஒதுக்கி செல்ல வேண்டும். இளைஞர்கள் இதை தங்கள் கடமையாக நினைக்க வேண்டும். மத்தியில் நிலையான அரசு அமைய வேண்டும் என்றார்.
 
அனைவரும் வாக்களிக்க ரஜினி வேண்டுகோள்!!!

சென்னை: போயஸ்கார்டன் கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் காலை 7.10 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். ஒரு சில வாக்காளர்கள் மட்டுமே இருந்தனர். அவர் வந்ததும் பொதுமக்கள் அவருக்கு வழி விட்டனர். விரலில் மை வைத்ததும் நேராக ஓட்டு மெஷின் அருகே சென்றார். அப்போது கையெழுத்திட்ட பிறகுதான் வாக்களிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். அவரது பெயர் சரிபார்க்கப்பட்டு, கையெழுத்து போட்ட பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.வாக்களித்து முடித்த பிறகு வெளியில் வந்ததும் நிருபர்களிடம் அவர் கூறும்போது, ‘Ôஎல்லோரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்றார். அப்போது, யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் கூறாமல், கட்டை விரலை உயர்த்தி வெற்றி முத்திரையை காட்டிவிட்டு ரஜினி சென்றார்..
 

Comments