25th of April 2014சென்னை::நயன்தாரா ஒத்துழைப்பு தராததால் அவரை ஓரம்கட்டிவிட்டு வேறு நடிகையை வைத்து பாடலை படமாக்கினார் இயக்குனர்.இந்தியில் வித்யாபாலன் நடித்த ‘கஹானி‘ படத்தை தமிழில் ‘நீ எங்கே என் அன்பே‘, தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயர்களில் இயக்குகிறார் சேகர் கம்முலா. வித்யா பாலன் நடித்த வேடத்தில் நயன்தாரா நடித்துள்ளார். ச
மீபத்தில் இதன் ஆடியோ விழா நடந்தது. இதில் நயன்தாரா பங்கேற்காமல் புறக்கணித்தார். விழாவில் பேசிய இயக்குனர், ‘நயன்தாரா இந்த விழாவுக்கு வராதது எனக்கு கோபம்‘ என்று குறிப்பிட்டார். பிறகு இதுபற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ‘பட புரமோஷனுக்கு வருவதில்லை என்பது நயன்தாராவின் பாலிசி. இதற்கு முன்பும் அவர் நடித்த படங்களின் விழாக்களில் பங்கேற்றதில்லை. அதைத் தான் இப்போதும் செய்திருக்கிறார்.
இப்படத்துக்கான புரமோஷன் ஆல்பத் தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டபோது மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக சுனிதா என்பவர் நடித்தார். இதுதான் நயன்தாரா கோபத்துக்கு காரணமா என்கிறார்கள். அப்படி இல்லை. ஹாலிவுட் படங்களில் பட ஹீரோயின் இல்லாமல்வேறு ஒருவரை வைத்துத்தான் ஆல்பம் தயாரிக்கிறார்கள். அந்த பாணியில்தான் இந்த ஆல்பம் படமானது. நயன்தாராவுடன் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை’ என்றார். ஆனால் இருவருக்கும் இடையே மோதல் இருக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்..
Comments
Post a Comment