13th of April 2014
சென்னை::ஒரு கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகரையோ, நடிகையையோ அல்லது கதைக்கு ஏற்ற
ஹீரோ, ஹீரோயினை தேடுவது இயக்குநர்களுக்கு ஒரு பெரிய பணியாக இருந்தது.
அவர்களுடைய உதவி இயக்குநர்கள் இதில் பெரும் பங்கு வகித்தாலும், அவர்கள்
எதிர்ப்பார்த்த அந்த முகத்தைக் கண்டுபிடிக்க, தமிழகத்தை தவிர மற்ற அனைத்து
மாநிலங்களிலும் பயணம் மேற்கொள்கிறார்கள்.
தமிழ் திரையுல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் இந்த பலுவைக் குறைக்க வந்திருக்கிறது மேங்கோ காஸ்டிங் (Mango Casting) என்ற ஒரு நிறுவனம்.பிரான்சிஸ், சிரஞ்சீவி என்ற இரண்டு நடத்தும் இந்த நிறுவனத்தில், 3 வயது இருந்து 70 வரையிலான கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடிய சுமார் 5000 நடிகர், நடிகைகள் தங்களுடைய விபரங்களை பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் தங்களது படத்திற்கும், கதாபாத்திரத்திற்கு தேவையான நடிகர், நடிகைகளை மாநிலம், மாநிலமாக அலைந்து தேர்வு செய்யாமல், சென்னையிலேயே தேர்வு செய்துகொள்ளலாம்.
அஜீத் நடிப்பில் கெளதம் மேனன் இயக்க உள்ள புதிய படத்திற்கான, சில கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர், நடிகைகளை இந்த மேங்கோ காஸ்டிங் நிறுவனம் தான் வழங்கியுள்ளது. மேலும், உதயநிதி நடிக்கும் நண்பேண்டா, மாலுமி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களுக்கு நடிகர், நடிகைகளை வழங்கியுள்ள இந்த நிறுவனம் கல்யாண் ஜுவல்லரி, என்.ஏ.சி நகைக்கடை, நாகாஸ், கீரின் டிரெண்ட் ஆகிய விளம்பர படங்களில் நடித்துள்ளவர்களையும் திரைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் ஒருவரான சிரஞ்சீவி கூறுகையில், "மேங்கோ காஸ்டிங், மற்றும் கீ விளம்பர நிறுவனம் மூலம் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நாங்கள் இருக்கிறோம். விளமபரப் படங்கள் எடுப்பது, மாடல் புகைப்படம் எடுப்பது என்று ஆரம்பித்த நாங்கள், சமீபத்தில் இந்த காஸ்டிங் வழங்கும் நிறுவனத்தை தொடங்கினோம். எங்களிடம் சென்னை, பெங்களூர், கேரளா, மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலத்தில் உள்ள சுமார் 5000 நடிகர், நடிகைகள் உள்ளனர்.
தற்போது பல படங்களுக்கு நாங்கள் கேஸ்டிங் தேர்வு செய்து கொடுத்துள்ளோம். ஒரு முழுப்படத்திற்கும் தேவையான அனைத்து நடிகர், நடிகைகளை வழங்கும் அளவுக்கு எங்களிடத்தில் பல திறமை வாய்ந்த, ஆர்வமிக்கவர்கள் உள்ளார்கள். சமீபத்தில் அஜீத், கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு சில காதாபாத்திரங்களுக்கு சில நடிகர், நடிகைகள் எங்கள் நிறுவனத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில், கெளதம் மேனன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களான நாயகி, நாயகர்களையும் நாங்கள் வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு." என்றார்.
இந்த மேங்கோ கேஸ்டின் நிறுவனத்தின் நடிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது விபரம் மற்றும் புகைப்படத்தைக் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். அப்படி பதிவு செய்பவர்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை. அவர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது மட்டும், சிறிய தொகை ஒன்றை வசூலித்துக்கொள்வார்களாம்...

Comments
Post a Comment