பாட்ஷா ‘ஒன் டைம் மேஜிக்’ மாதிரி : சுரேஷ் கிருஷ்ணாவின் ஆசைக்கு கடிவாளம் போட்ட ரஜினி!!!

5th of April 2014
சென்னை::ஜினியின் சினிமா வரலாற்றில் ‘பாட்ஷா’ படத்துக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
ரஜினியின் மாறுபட்ட நடிப்பில் ரிலீசான அந்தப் படத்தை சுரேஷ்கிருஷ்ணா டைரக்ட் செய்திருந்தார். கடந்த 1995 ஆம் ஆண்டு ரிலீசான இது ரஜினியின் ஹிட் பட லிஸ்ட்டில் எப்போதும் தானாகவே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
 
அப்படிப்பட்ட இந்தப் படத்தின் ரெண்டாம் பாகம் எடுக்கப்பட இருப்பதாகவும், அதில் ரஜினி நடிக்கப் போவதாகவும் சமீபகாலமாக கோலிவுட்டில் கிசுகிசுத்து வந்தார்கள். அதன் டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா கூட ”ரஜினி சார் சம்மதம் சொன்னால் ‘பாட்ஷா’ படத்தின் செகண்ட் பார்ட்டை டைரக்ட் செய்யத் தயாராக இருப்பதாக” எல்லா மீடியாக்களிடம் ஆசையோடு பேட்டிகள் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 14 ஜெயாடிவியின் தமிழ்ப்புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ரஜினியை பேட்டி எடுத்த நடிகர் விவேக் இதுபற்றி ரஜினியிடம் நேரடியாக கேட்டாராம்.
 
அதற்கு பதிலளித்த ரஜினி ”பாட்ஷா படம் என்னோட சினிமா கேரியர்ல ஒன் டைம் மேஜிக் மாதிரி. அது ஏற்படுத்திய மேஜிக்கை இரண்டாவது பாகம் ஏற்படுத்தும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகச் சொன்னாராம்.
ரசிகர்களோட பல்ஸ் எப்போ எப்படி மாறும்னு ரஜினிக்கு தெரியாதா என்ன…?

Comments