ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்கிறார்?!!!

10th of April 2014
சென்னை::விக்ரம், ஏமி ஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் 'ஐ' படத்தினை ஷங்கர் இயக்கி இருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்திருக்கிறார்.இப்பட வேலைகள்  இறுதிக்கட்டத்தில் உள்ளன

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டை உலக அளவில் முன்னணி நடிகரை அழைத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். சிறப்பு விருந்தினர் ஒதுக்கும் தேதிகளைப் பொறுத்து விழா ஏற்பாடு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். விழா மே மாத இறுதியில் அல்லது ஜுன் முதல் வாரத்தில் இருக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.அதுமட்டுமன்றி, 'ஐ' படத்தினை 16 மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்

எப்போதுமே தனது பிரம்மாண்டமான தயாரிப்பு படங்களின் இசையை, பெரிய நடிகர்களை வைத்து, மிகப் பிரம்மாண்டமாக இசை வெளியீடு நடத்துவார். கமல் நடித்த 'தசாவதாரம்' படத்தின் இசையினை ஜாக்கி சான் வெளியிட பிரம்மாண்டாக இசை வெளியீடு நடைபெற்றது

 ஐ படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு கலந்து கொள்ள  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
 

Comments