பாலிவுட் பட தேர்வுக்கு லேட்டாக சென்றதால் ப்ரணிதாவுக்கு கல்தா!!

8th of April 2014
சென்னை::பாலிவுட் பட தேர்வுக்கு லேட்டாக சென்றதால் ப்ரணிதாவுக்கு கல்தா கொடுத்தார் இயக்குனர்.‘சகுனி  படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ப்ரணிதா. இப்படம் அவருக்கு

கைகொடுக்காததால் ஏற்கனவே நடித்து வந்த கன்னட படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘அத்தரின்டிக்கி தாரிடி படத்தில் இரண்டு ஹீரோயின்களில்

ஒருவராக ப்ரணிதா நடித்தார். இப்படம் வெற்றி பெற்றதையடுத்து ப்ரணிதாவுக்கு புதுமவுசு வந்தது. அத்துடன் காஜல் அகர்வால், இலியானா போல் பாலிவுட் ஆசையும் வந்தது. நீரஜ் பாண்டே

இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிக்கும் புது இந்தி படத்தில் நடிக்கும் ஹீரோயின்கள் பட்டியலில் ப்ரணிதாவும் இடம்பிடித்தார்.ஆடிஷன் எனப்படும் நேர்முக தேர்வுக்கு வரும்படி நீரஜ் விடுத்திருந்த

அழைப்பை ஏற்று மும்பை சென்றார் ப்ரணிதா.

ஆனால் குறித்த நேரத்தில் நீரஜை சந்திக்காமல் காலதாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் டென்ஷன் ஆனார் இயக்குனர். முதல் சந்திப்பிலேயே இந்தியில் வசனம் கொடுத்து பேசச்

சொன்னார். இதை சரியாக உச்சரிக்க முடியாமல் திணறினார் ப்ரணிதா. அவர் மீது திருப்தி ஏற்படாததால் ப்ரணிதாவை ரிஜெக்ட் செய்தார் நீரஜ். ஏற்கனவே அக்ஷய்குமார் நடித்த ‘ஸ்பெஷல்

26இந்தி படத்தில் தென்னிந்திய நடிகை காஜல் அகர்வாலை அறிமுகம் செய்திருந்த நீரஜ், தனது புதிய படம் மூலம் மற்றொரு தென்னிந்திய நடிகையை அறிமுகம் செய்ய எண்ணி இருந்தார்.

அந்த வாய்ப்பை கைநழுவ விட்ட ப்ரணிதா, பாலிவுட் பிரவேசம் ஏமாற்றத்தில் முடிந்ததால் சோகத்தில் ஆழ்ந்தார்...
  

Comments