2nd of April 2014
சென்னை::எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் தனது மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது ஒரு சில மனிதர்களாலேயே முடியும். அப்படி ஒரு அற்புத நிகழ்வுதான் ‘கோச்சடையான்’ படத்தின் இந்திப்பதிப்பின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியிலும் நடந்தது.

சென்னையில் நடந்த ‘கோச்சடையான்’ இசை வெளியீட்டு விழாவில் ஷாருக்கான் கலந்துகொண்டு சிறப்பித்ததுபோல மும்பையில் நடைபெற்ற இசைவெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் அமிதாப் பச்சன்.
இந்தவிழாவில் மேடையேறிய ரஜினி அமிதாப்பின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாராம். ரஜினியை பொறுத்தவரை அமிதாப்பை நண்பர் என்பதைவிட தனது குரு என்கிற ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறார். அதற்கான மரியாதையை செய்து அவரை உயர்த்தியதோடு தானும் அதைவிட ஒருபடி மேலே உயர்ந்துவிட்டார் ரஜினி.
பின்குறிப்பு : ரஜினி இந்தியில் நடித்தபோது அதிகப்படங்களில் அமிதாப்புடன் சேர்ந்துதான் நடித்துள்ளார். மேலும் அமிதாப் நடித்த 12 படங்களின் தமிழ் ரீமேக்கில் நடித்திருக்கிறார் ரஜினி.
அதில் மெகாஹிட் படங்களான ‘பில்லா’, ‘தீ’,‘படிக்காதவன்’, ‘பாட்ஷா(அவுட்லைன் மட்டும்)’ ஆகியவை இப்படி உருவானவை தான். .....
Comments
Post a Comment