ஆடியோ விழாவுக்கு வராமல் நயன்தாரா புறக்கணித்ததால் இயக்குனர் அதிர்ச்சி!

23rd of April 2014
சென்னை::ஆடியோ விழாவுக்கு வராமல் நயன்தாரா புறக்கணித்ததால் இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார்.தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபகாலமாக பெரும்பாலான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ஆனால் தனது பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நயன்தாரா தவிர்த்து வருகிறார். அவர் பிரதான வேடத்தில் நடிக்க தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘நீ எங்கே என் அன்பே' (தெலுங்கில் அனாமிகா) பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று அப்பட இயக்குனர் சேகர் கம்முலா தெரிவித்திருந்தார்.

ஆனால் அதில் நயன்தாரா பங்கேற்கவில்லை.இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ விழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. நயன்தாரா தவிர படத்தில் நடித்த மற்ற அனைவரும் பங்கேற்றனர். இது இயக்குனருக்கு அதிர்ச்சியை அளித்தது. கடந்த 16ம் தேதி ஆடியோ விழா நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நயன்தாரா வர இயலவில்லை என்றதால் தள்ளிவைக்கப்பட்டது. பட ரிலீஸ் ஆக 10 நாட்களே உள்ள நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியிலும்

நயன்தாரா பங்கேற்காமல் புறக்கணித்தார். படம தொடங்கியதில் இருந்தே டைரக்டர் சேகர் கம்முலாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் நயன்தாரா. இந்தி Ôகஹானி' பட ரீமேக்தான் இந்த படம். அந்த பட கதையின் திருப்புமுனையே கர்ப்பிணி வேடம்தான். ஆனால் கர்ப்பிணியாக நடிக்க மாட்டேன் என நயன்தாரா அடம் பிடித்தார். இதையடுத்து அவருக்காக வேடம் மாற்றப்பட்டது. தொடர்ந்து ஷூட்டிங்கில் அவர் குடைச்சல் தந்ததாகவும் பட யூனிட் தெரிவிக்கிறது.
 

Comments