22nd of April 2014
சென்னை::சிங்கம் 2′ வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள சூர்யா நம்பியிருப்பது லிங்குசாமியின் ‘அஞ்சான்’ மட்டும் தான். அதனால் வேறு எந்தப் படத்துக்கும் கொடுக்காத கால்ஷீட் தேதிகளை அஞ்சானுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
‘
அஞ்சான்’ ரிலீசான பிறகு தான் அடுத்த படத்தை கமிட் செய்வது என்பதில் தெளிவாக இருக்கும் சூர்யா படத்தின் சண்டக்காட்சிகளில் கொஞ்சம் ஓவராகவே ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறாராம்.
சமீபத்தில் கோவாவில் அஞ்சானுக்காக பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் மேற்பார்வையில் படமாக்கப்பட்டுக் கொண்டிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சூர்யாவுக்கு உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இதனால் பரபரப்பான அஞ்சான் டீம் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்து விட்டு சூர்யாவுக்கு மருத்துவ உதவிகளை செய்திருக்கிறார்கள்.
சண்டைக்காட்சியில் நடித்த போது சூர்யாவுக்கு சின்ன சின்ன காயங்கள் ஏற்பட்டது என்னவோ உண்மை தான். ஆனால் அது ஹாஸ்பிட்டலில் சேர்ந்து சிகிச்சைப் பெறக்கூடிய அளவுக்கு பெரிய காயங்கள் எல்லாம் இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. அப்படி ஏதாவது செய்தி வந்திருந்தால் அது வதந்தி தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
வருகிற ஆகஸ்ட் 15- ஆம் தேதி அஞ்சானை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் லிங்குசாமி.
Comments
Post a Comment