பெர்சனல் ஃபேஸ்புக் பக்கம் ரெடி : ரசிகர்களுக்காக விஜய் செய்த ‘பலே’ திட்டம்!!!

5th of April 2014
சென்னை::டிகர் விஜய் சமீபத்தில் தான் ட்விட்டரில் இணைந்தார். ஜில்லா படம் ரிலீசான போதுகூட அதன் மூலம் தனது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார்.
 
ட்விட்டரில் சொந்தமாக அக்கவுண்ட் இருந்தாலும் அவருக்கு ஃபேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமான பக்கம் இல்லை. ஆனால் அவரது பெயரில் ஃபேஸ்புக் பக்கங்களை அவரது ரசிகர்களே சிலபேர் துவங்கி செயல்படுத்தி வருகிறார்கள். இந்த பக்கங்களில் எல்லாம் அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் மெம்பராகி அவர்களை பின் தொடர்ந்து வருகிறார்கள். இதனைக் கேள்விப்பட்ட விஜய் ஒரு புதிய முடிவை எடுத்திருக்கிறார்.
 
அது வேறு ஒன்றுமில்லை, தனது பெயரில் இருக்கும் எல்லா ஃபேஸ்புக் பக்கங்களையும் ஒரே பக்கமாக்க முடிவு செய்துள்ளார். இந்த ஐடியாவை தனது ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு போன அவர் அப்படி செய்யும் பட்சத்தில் எல்லா ரசிகர்களுடனும் ஒரே ஃபேஸ்புக் பக்கம் மூலமாக இணைய முடியும் என்று நினைக்கிறார்.
 
அவரின் இந்த முடிவுக்கு ரசிகர்களும் ஓ.கே சொல்லி விட்டதால் விரைவில் இதற்கான வேலைகளை முடுக்கி விட இருக்கிறார் விஜய்.…

Comments

  1. Excellent publish. I had been checking constantly this web site and I’m impressed ! Very helpful information specially the last part I take care of similarly info much. Hospitals in Dombivli || Physiotherapy in Dombivli || Hospital in Dombivli

    ReplyDelete

Post a Comment