24th of April 2014
சென்னை::லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறதாம்.
சென்னை::லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறதாம்.
இதற்கடுத்து சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் ஸ்ருதிஹாசனிடம்
பேசினார்களாம்.
ஸ்ருதி இப்போது ஹரி இயக்கும் 'பூஜை' படத்தில் பிஸியாக இருப்பதால், வேறு
நடிகையைத் தேடினார்கள். இப்போது நயன்தாராவை சூர்யாவிற்கு ஜோடி சேர்க்கப்
போகிறார்களாம்.
இதற்குமுன் 'கஜினி' படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'ஆதவன்'
படத்திலும் சூர்யாவும், நயன்தாராவும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment