சூர்யாவை வைத்து அடுத்த மங்காத்தாவை ஆட வெங்கட்பிரபு தயார்!!!

13th of April 2014
சென்னை::சூர்யாவை வைத்து அடுத்த மங்காத்தாவை ஆட வெங்கட்பிரபு தயாராகி விட்டார் என்று ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டது போன்று இப்போது அவர்கள் இருவரும் இணையும் படத்தின் பூஜை தமிழ்ப்புத்தாண்டு தினமான நாளை நடைபெறுகிறது.
 
மங்கத்தாவை இயக்கி முடித்ததும் டைரக்டர் வெங்கட்பிரபுவின் டார்கெட்டே விஜய்யா-சூர்யாவா என்றுதான் இருந்தது. ஆனால், அப்போது இருந்த நெருக்கடியில் அவரால் விஜய்யை நெருங்க முடியவில்லை. ஆனால் சூர்யாவை எளிதாக நெருங்கி கதை சொன்னார். அவரும் அதைக்கேட்டு கண்டிப்பாக நடிக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு தம்பி கார்த்தியை வைத்து ஒரு படம் பண்ணுங்கள். அதற்குள் நான் சிங்கம்-2, அஞ்சான் படங்களை முடித்து விடுகிறேன் என்றார்.
 
இந்நிலையில், தற்போது அஞ்சான் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டி விட்டதால், அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார் சூர்யா. இப்படத்தையும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது. மற்றபடி சூர்யாவுடன் நடிக்கும் கதாநாயகி, வில்லன் உள்ளிட்ட முக்கிய நடிகர்-நடிகைகளை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்கள்...

Comments