ராஜமௌலியிடம் ரஜினி வைத்த வேண்டுகோள்!!!


21st of April 2014
சென்னை::அவரோ சரித்திர படங்களை இயக்குவதில் ஜாம்பவான்.. அப்படியென்றால் ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் அவர் கலந்துகொண்டால் தானே சிறப்பாக இருக்கும். அதுதான் நடந்தேறியிருக்கிறது. ஆனால் இங்கல்ல.. ஆந்திராவில்..
 
கோச்சடையான்’ படத்தின் தெலுங்கு பதிப்பான ‘விக்ரம சிம்ஹா’வின் இசைவெளியீட்டு விழாவில் பிரபல இயக்குனர் ராஜமௌலி கலந்துகொண்ட சரித்திர நிகழ்வை பற்றித்தான் சொல்கிறோம். இந்த விழாவில் ‘கோச்சடையான்’ படத்தின் இயக்குனரான சௌந்தர்யா, ராஜமௌலியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
 
விழாவின்போது ராஜமௌலியிடம் வேண்டுகோள் ஒன்று விடுத்தார் ரஜினி ராஜமௌலி தற்போது இயக்கிவரும் மிக பிரமாண்டமான படமான ‘பாஹுபலி’ படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து அவர் படமாக்கும் வித்தையை பார்த்து ரசிக்கவேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். இதைவிட சிறப்பான அங்கீகாரம் ராஜமௌலிக்கு இனி ஒன்று கிடைத்துவிடுமா என்ன..?.
 

Comments