பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை மணக்கிறார்!!!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

23rd of April 2014
சென்னை::பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை மணக்கிறார். ‘மாஸ்கோவின் காவிரி, ‘விண்மீன்கள், ‘சூர்ய நகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராகுல்  ரவீந்திரன். இவரும் பின்னணி பாடகி சின்மயியும் காதலித்து வந்தனர். இதையடுத்து வரும் மே மாதம் 6ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் பாட சின்மயி முடிவு செய்துள்ளார்.இது பற்றி சின்மயி அம்மா பத்மா ஹாசினி கூறும்போது, ‘இது பெற்றோரால்  நிச்சயிக்கப்படும் காதல் திருமணம். திருமணத்துக்கு வரும் பெரும்பாலானோர் பூச்செண்டு கொண்டு வருவார்கள். ஒரு பூச்செண்டின் விலை இன்றைய தினம் ரூ. 500  ஆகிறது.

திருமண நிகழ்ச்சி முடிந்தபின் பூச்செண்டுகள் பயனற்றுபோய்விடும். எனவே பரிசு பொருட்களுக்கும், பூச்செண்டுக்கும் செலவழிக்கும் பணத்தை  அறக்கட்டளை பணிக்கு நிதியாக அளிக்கவேண்டும் என்று திருமண அழைப்பிதழில் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றார்.
 

Comments