நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!!!

8th of April 2014
சென்னை::முத்தக் காட்சியால் பரபரப்பையும், எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு மறுதணிக்கையிலும் யு/ஏ சான்றிதழே வழங்கப்பட்டது.

விஷால்ம், லட்சுமி மேனன் நடிப்பில், திரு இயகக்த்தில் விஷால் பிலிம் பேக்டரி, யுடிவி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'நான் சிகப்பு மனிதன்' இப்படத்தின் மூலம் விஷாலுடன் இரண்டாவது முறையாக ஜோடி போட்டுள்ள லட்சுமி மேனன், இதுவரை இலலாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம். மேலும், இப்படத்தில் லிப் டூ லிப் முத்தக்காட்சி ஒன்றும் இடம்பெறுகிறது.

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், குறிப்பிட அந்த முத்தக்காட்சியை நீக்கினால், படத்திற்கு யு சான்றிதழ் வழங்குவதாகவும், இல்லையெனில் யு/ஏ சான்றிதழ் வழங்குவதாகவும் கூறினார்கள். ஆனால், முத்தக்காட்சி படத்திற்கு ரொம்ப முக்கியம் என்பதால், அதை நீக்க படக்குழுவினர் மறுத்துவிட்டனர். அதே சமயம், யு இல்லையெனில் வரிவிலக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதாலும், படத்தை மறு தணிக்கைக்கு எடுத்துச் சென்றனர்.

மறு தணிக்கையில் நேற்று படம் பார்த்தவர்களும், அந்த முத்த காட்சியை நீக்கினால் தான் யு சான்றிதழ் என்று, திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். ஆனால் படக்குழுவினர் படத்தின் முக்கியம் கருதி சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க மறுத்துவிட்டனராம். இதையடுத்து தணிக்கை குழுவினர் 'நான் சிகப்பு மனிதன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக அறிவித்தனர்....
 

Comments