அண்ணன் டைரக்ஷனில் தம்பி..! யுடிவியுடன் கைகோர்க்கிறார் விஷ்ணுவர்தன்!!!


19th of April 2014
சென்னை::முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் எப்போதோ ஒரு இடத்தை பிடித்துவிட்ட விஷ்ணுவர்தன் சினிமாவில் நுழைந்து பத்து வருடமாகிறது. அஜித், ஆர்யா என இவரது ஃபேவரைட் ஹீரோக்கள் இருவரை மட்டுமே வைத்து படங்களை இயக்கியுள்ள விஷ்ணுவர்தனுக்கு தனது தம்பியான ‘கழுகு’ கிருஷ்ணாவை வைத்து ஒரு படத்தை இயக்காதது மனக்குறையாகவே இருந்து வந்தது.. திரையுலகிலும் ரசிகர்களிடமும் இது ஒரு கேள்வியாகவும் இருந்து வந்தது.
 
இப்போது அந்த குறையை தீர்க்கும் விதமாக ஆர்யா, கிருஷ்ணா இருவரையும் வைத்து ‘யட்சன்’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தை யுடிவி நிறுவனம், விஷ்ணுவர்தன் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
 
விஷ்ணுவர்தனின் மியூசிக் பார்ட்னரான யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். கிஷோர், தம்பி ராமையா, ஜான் விஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்க இருக்கும் இரண்டு கதாநாயகிகள் யார் என விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

Comments