கோலிவுட்டின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுக்கு தடை போட்ட இயக்குனர் சங்கம்!!!

22nd of April 2014
சென்னை::கோலிவுட்டின் முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்களில் பீட்டர் ஹெய்ன் குறிப்பிடத்தக்கவர். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் படங்களுக்கெல்லாம் அவர்தான் சண்டை பயிற்சியாளர். அதோடு பீட்டர் ஹெய்ன் ஹாலிவுட்டுக்கு நிகராக சண்டை பயிற்சிகளை கொடுப்பதால் முன்னணி ஹீரோக்கள் அவரை ஸ்டன்ட் மாஸ்டராக நியமிக்க இயக்குனர்களை கேட்டுக்கொள்வார்கள்.
 
இதனால் பீட்டர் ஹெய்னுக்கும், ஹீரோக்களுக்குமிடையே நல்லுறவு நீடித்து வந்தபோதும், பீட்டர் ஹெய்னுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக தொழில் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு, அது கருத்து வேறுபாடாகியிருக்கிறது.
 
ஆனால் இதுகுறித்து பெப்சி சார்பில் பிரச்னையை தீர்க்க எடுத்து முடிவுகளுக்கு அவர் கட்டுப்படவில்லையாம். அதனால், இப்போது பெப்சி சார்பில் தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரம், இனிமேல் தமிழ்ப்படங்களுக்கு பீட்டர் ஹெய்னை புக் பண்ணுவதை தவிருங்கள் என்று இயக்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளார். விக்ரமனின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார் பீட்டர் ஹெய்ன்.
’’

Comments