கஜினி மூலம் இன்னொரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!!!

20th of April 2014
சென்னை::காக்க காக்க படத்தில் கெளதம்மேனன் சூர்யாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த பிறகு கஜினி மூலம் இன்னொரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு அவரது படங்களின் பட்ஜெட்டும் எகிறியது. மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்தார். அதனால், ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 என ஆக்சன் கதைகளில் சூர்யாவை, ஹரி உள்ளிட்டோர் இயக்கத்தொடங்கினர். ஆனால், சிங்கம்-2 வை முடித்த பிறகு எந்த படத்தில் நடிப்பது என்பதில் ரொம்பவே குழம்பிப்போனார் சூர்யா. அந்த நேரத்தில் முருகதாஸ் போன்ற நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் தன்னை வைத்து ஒரு படம் இயக்க மாட்டார்களா என்று அவர் எதிர்பார்த்தாராம்.
 
ஆனால், துப்பாக்கியைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யை வைத்தே அவர் கத்தி படத்தை இயக்கப்போகும் செய்தி அறிந்து அவரிடம் தனது விருப்பத்தை தெரிவிக்காத சூர்யா, உடனடியாக லிங்குசாமிக்கு கால்சீட் கொடுத்து இப்போது அஞ்சானில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், என்ன நினைத்தாரோ, அந்த படம் ரிலீசாகும் முன்பே, வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கத் தொடங்கி விட்டவர், அந்த படம் முருகதாஸின் கஜினி படம் போன்று விறுவிறுப்பான திரைக்கதையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் சூர்யா. அதனால் தனது பாணியில் இருந்து சற்றே விலகி சூர்யா எதிர்பார்ப்பது போன்று திரைக்கதையில் வேகத்தை புகுத்தி வருகிறாராம் வெங்கட்பிரபு.
 

Comments