நாளை ‘பூஜை’ ஆரம்பம்.. தீபாவளிக்கு ரிலீஸ்… ஹரி – விஷால் அதிரடி!!!

17th of April 2014
சென்னை::வேகம்.. வேகம்.. வேகம்.. இதுதான் ஹரி என்கிற ஹைஸ்பீடு எஞ்சின்.. இதற்கு விஷால் என்னும் பெட்ரோலை ஊற்றினால்.. கேட்கவா வேண்டும். நாளை>>>
தங்களது படமான ‘பூஜை’ பட்த்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஹரி.. தாமிரபரணி படத்திற்கு அடுத்து விஷால்-ஹரி இணையும் இந்தப்படம் முக்கோண ஆக்ஷன் கதையாக உருவாகிறது.
 
நாட்டுல இப்ப இருக்கிற முக்கியமான ஒரு பிரச்சனையை எதிர்த்து ஹீரோ போராடுறான். அதை ஒரு குடும்ப பின்னணி, அழுத்தமான காதல் சேர்த்து சொல்கிறோம். சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்துர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய் முடியும்” என பரபர கதைக்கு திரைக்கதையில் திரி கொளுத்துகிறார் ஹரி.
 
விஷாலுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். “படத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைபட்டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்கு படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்” என்கிறார் ஹரி.
 
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். மேலும் ராதிகா, கௌசல்யா, சித்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே உண்டு..
 

Comments