4th of April 2014
சென்னை::2005ல் நாகார்ஜூனா நடித்த சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் நடிகையானவர்
அனுஷ்கா. முதல் படத்திலேயே முன்னணி ஹீரோவுடன் நடித்த அனுஷ்காவுக்கு
அடுத்தடுத்து படங்கள் குவிந்ததால் தெலுங்கில் முன்னணி நடிகையானார். அந்த
நேரத்தில் தமிழிலும் ரெண்டு என்ற படத்தில் நடித்தார் ஆனால் படம்
ஹிட்டடிக்கவில்லை. ஆனபோதும், அருந்ததி மெகா ஹிட்டானதால் பின்னர்
கோடம்பாக்கத்திலும் கொடி ஏற்றிய அனுஷ்கா, இப்போது மீண்டும் தெலுங்கில்
ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களில்
நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து தமிழில் ரஜினி, அஜீத்
நடிக்கயிருக்கும் புதிய படங்களில் அவர் நடிக்கயிருப்பதாக செய்திகள்
பரவிக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இந்த நேரத்தில்
தெலுங்கு மீடியாக்களுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், கைவசம் உள்ள
படங்களை முடித்ததும் திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு
முழுக்குப்போடப்போகிறேன் என்று கூறியுள்ளாராம் அனுஷ்கா. தற்போது 32 வயதை
எட்டியுள்ள அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து
வருவதோடு, இந்த ஆண்டே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் தீவிரமாக
உள்ளார்களாம். அதனால்தான் இதுவரை திருமணம் பற்றி வாய் திறக்காமல் இருந்த
அனுஷ்கா இப்போது அவரே வெளிப்படையாக அறிவித்துள்ளாராம்.....
Comments
Post a Comment