29th of April 2014
சென்னை::பூபதிபாண்டியன் இயக்கத்தில், விஷால் ஹீரோவாக நடித்த பட்டத்துயானை
படத்தில் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக களம் இறக்கினார் அர்ஜுன்.
பட்டத்துயானை படத்தின் படுதோல்வி காரணமாகவோ என்னவோ, ஐஸ்வர்யாவுக்கு
எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து படவாய்ப்புகள் வரவில்லை.
தமிழில்தானே இப்படி?
எனவே மற்ற மொழிகளில் முயற்சி செய்து பார்க்கலாம்..! என்று கன்னடம் மற்றும்
தெலுங்குப் படங்களில் தன் மகளுக்கு வாய்ப்பு தேடும் படலத்தை ஆரம்பித்தார்
அர்ஜுன். அதாவது தனக்கு நெருக்கமான ஆட்கள் மூலம் ரகசியமாக வாய்ப்பு
தேடினார். அங்கும் பாசிட்டிவ்வான ரெஸ்பான்ஸ் வரவில்லை.
பட்டத்துயானை
படத்தின் ரிசல்ட் மட்டுமல்ல, அந்தப் படத்தின் தோல்விக்கே அர்ஜுனின்
மகள்தான் காரணம் என்பதுபோல் கோடம்பாக்கத்தில் சிலர் அடித்த
கமெண்ட்டுகளினால் ஐஸ்வர்யாவை பிற மொழிகளிலும் கதாநாயகியாக வைத்து படம்
எடுக்க யாரும் முன்வரவில்லை. அதனால் கடும் அப்ஸெட்டானார் ஐஸ்வர்யா.
மகளின்
மனதை தேற்றி, தற்போது தான் இயக்கிவரும் ஜெய்ஹிந்த் - 2 படத்தில் ஐஸ்வர்யாவை
இணை தயாரிப்பாளராக்கிவிட்டார் அர்ஜுன். படத்தயாரிப்பில் அவருக்கு பயிற்சி
கொடுத்து, தன் படநிறுவனத்தையே ஐஸ்வர்யாவிடம் ஒப்படைக்க முடிவு
செய்திருக்கிறாராம் அர்ஜுன். அதுமட்டுமல்ல, டைரக்ஷனிலும் மகளுக்கு பயிற்சி
கொடுக்க திட்டமிட்டிருக்கிறாராம்..
Comments
Post a Comment