10th of April 2014
சென்னை::கெளதம்மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் காதலர்களாக நடித்த சிம்பு-திரிஷா இருவரும் கொடுத்த அவுட்புட் இளவட்ட ரசிகர்களை உலுக்கி எடுத்தது. அந்த அளவுக்கு காதலின் உச்சம் தொடும் காட்சிகளில் வித்தியாசமான ரொமாண்டிக்கை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

ஆனால், அப்படியொரு மெகா ஹிட்
படத்தில் நடித்தபோதும் அதையடுத்து அவர்களை யாரும் ஜோடி சேர்க்கவில்லை. பல
வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில்
அவர்கள் இணையப்போகிறார்கள். அதனால் சிம்பு-திரிஷா இருவரும் மீண்டுமொரு
காதல் கவிதை எழுத தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
என்றென்றும்
புன்னகை படத்தையடுத்து ஜெயம்ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துள்ள
திரிஷா, சிம்புவுடன் இணையப்போகும் இந்த படத்தை பெரிய அளவில்
எதிர்பார்க்கிறார். தனக்கான ரசிகர்கள் இன்னும் அப்படியே இருப்பதாக கருதும்
அவர்,
தற்போது களத்தில் நிற்கும் நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வாலை
மிஞ்சும் அளவுக்கு ரொமான்ஸை வெளிப்படுத்தி ரசிகர்களின் உதடுகளில் மீண்டும்
உச்சரிக்கப்பட வேண்டும் என்று முந்தைய படத்தை விட இப்படத்தில் சிம்புவுடன்
இன்னும் காற்றுப்புகா நெருக்கம் காட்டி நடிக்கவும் முடிவெடுத்துள்ளார்...
Comments
Post a Comment