9th of April 2014
சென்னை::லேசா லேசா படத்தில் தனது சினிமா கேரியரை தொடங்கினார் த்ரிஷா.அந்தவகையில் 2002ல் நடிகையான அவர், இப்போதுவரை கதாநாயகியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், சிம்பு என்று நடித்தவர் மன்மதன் அம்பு படம் மூலம் கமலுடனும் ஜோடி சேர்ந்தார்.

தற்போதுகூட ஜீவா, ஜெயம்ரவி போன்ற
நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அவரைப்பொறுத்தவரை தமழில் ரஜினியுடன் ஒரு
படத்தில் கூட நடிக்காததுதான் பெரிய ஏமாற்றமாகியிருக்கிறது. மற்றபடி தமிழ்,
தெலுங்கு, மலையாளம், கன்னடம், இநதி வரை ஏராளமான படங்களில் நடித்து
விட்டார்.
இருப்பினும், தனது நடிப்பை
அங்கீகரிக்கும் வகையில் விருதுகள் கிடைக்கவில்லை என்று பீல் பண்ணத்
தொடங்கியிருக்கிறார் த்ரிஷா. மாநில அளவில் சில விருதுகளை
வாங்கியிருந்தாலும் தேசிய அளவிலான அங்கீகாரம் தனக்கு கிடைக்காததால், எனது
12 வருட சினிமா வாழ்க்கை ஏமாற்றமாகியிருக்கிறது என்று கூறும் த்ரிஷாவுக்கு,
வித்யாபாலன் நடித்தது போன்று தி டர்ட்டி பிக்சர்ஸ் மாதிரியான படங்களில்
நடித்து தேசிய விருது வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மனதளவில் இருக்கிறதாம்.
அதனால் அதற்கான வாய்ப்புகளுக்காக காத்திருப்பதாகவும் அபிமானிகளிடம்
கூறிவருகிறார்....
Comments
Post a Comment