11th of April 2014
சென்னை::ஸ்ரேயா ரெட்டி மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரேடியோ வர்ணனையாளராக இருந்த ஸ்ரேயா ரெட்டி சாமுராய் என்கிற
திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து திமிரு,
வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்தார். பிறகு
விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
வழக்கம்போல் இவரும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை
தவிர்த்தார். அதற்கு பதிலாக தயாரிப்பாளராக மாறிய ஸ்ரேயா ரெட்டி தோரணை,
வெடி, போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இரண்டு படங்களுமே படுதோல்வி
அடைந்தது. இந்நிலையில் ஸ்ரேயா ரெட்டி தயாரிப்பாளராக வெற்றி பெற முடியாததால்
மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.
விஷாலின் அடுத்த படமான பூஜை படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ரேயா
ரெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரேயா ரெட்டி மீண்டும் சினிமாவில்
நடிப்பதை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா விரும்பவில்லை என்று
கூறப்பட்டாலும், விஷால் தனது அண்ணியை நடிக்க வைப்பதில் விருப்பம்
காட்டுவதாக கூறப்படுகிறது....
Comments
Post a Comment