அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி நேரில் விசிட்

22nd of April 2014
சென்னை::அனுஷ்கா ஷூட்டிங்கிற்கு ரஜினி நேரில் சென்று அரண்மனை அரங்கை பார்த்து ரசித்தார்.‘கோச்சடையான் படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இதுவும் சரித்திர பின்னணியிலான படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்க உள்ளனர். சரித்திர பின்னணியிலான ‘கோச்சடையான்‘ படத்தில் ரஜினி நடித்திருந்தாலும் அது அனிமேஷன் படம்தான். அதனால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து ரவிக்குமார் படத்தில் நடிக்க விரும்புகிறார்
 
ரஜினி.இந்நிலையில் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது அனுஷ்கா நடித்துவரும் ‘பாஹுபாலி‘ படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அரண்மனை அரங்கையும், ஷூட்டிங்கையும் நேரில் பார்க்க விரும்பினார் ரஜினி. தன் விருப்பத்தை ராஜமவுலியிடம் கூறினார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட இயக்குனர், ‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.

நேற்றுமுன்தினம் ரஜினிகாந்த் ‘பாஹூபாலி ஷூட்டிங் தளத்துக்கு நேரில் சென்றார். அவரை ராஜமவுலி, அனுஷ்கா மற்றும் பட குழுவினர் வரவேற்றனர். அரங்கை சுற்றிப்பார்த்து ரஜினி பாராட்டியதுடன், ஷூட்டிங்கையும் பார்த்து ரசித்தார். 1  மணி நேரம் படப்பிடிப்பு பணிகளை பார்த்து ரசித்த ரஜினி, இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டார். இது பற்றி ராஜமவுலி, தனது இணைய தள பக்கத்தில், ‘என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் ரஜினி இப்படத்தின் ஷூட்டிங் தளத்துக்கு வந்ததுதான். அதற்காக அவருக்கு நன்றிஎன குறிப்பிட்டிருக்கிறார்.

Comments