1st of April 2014
சென்னை::ட்ரெண்ட் செட்டராக மாறிவிட்ட அனிருத், படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார். அதனால் தேவாவை அழைத்து ‘மான் கராத்தே’ படத்திlல் ஒரு கானா பாடலை பாடவைத்துவிட்டார் அனிருத்.

பின்னே.. 90களில் கானா பாடல்கள் மூலமாக சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவராயிற்றே.. தேவா இசையமைக்கும் எல்லா படங்களிலும் ஒரு கானா பாடல் நிச்சயம் என்பது ஊர் அறிந்த விஷயம். கானா பாடல்களிலேயே இது வித்தியாசமாக இருக்கும் என்கிறார் அனிருத்.
தற்போது ‘மான் கராத்தே’ படத்தில் தேவா பாடி இருக்கும் “ஓபன் தி டாஸ்மாக்” என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் பாப்புலராகி விட்டதால் அவருக்கு நிறைய படங்களில் பாட்டுப்பாட அழைப்பு வருகிறதாம். எந்த இசையமைப்பாளர் அழைத்தாலும் பாட நான் ரெடி என்கிறார் தேவா. கானாவை கேட்க நீங்க ரெடிதானே?..
Comments
Post a Comment