சென்னை::கடனை திருப்பி கொடுக்காத வெங்கட்பிரபு மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார் சோனா.‘குசேலன் ‘குரு என் ஆளுஉள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்கள¤ல் நடித்திருப்பவர் சோனா. இவர் கூறியதாவது: சில வருடங்களுக்கு முன் டைரக்டர் வெங்கட்பிரபுவும், நானும் நட்புடன் இருந்தோம். எனக்கு ஒரு படம் இயக்குவதாக கூறி இருந்தார்.
இதற்காக என்னிடம் பணம் பெற்றிருந்தார். சில காரணங்களால் அப்படம் டிராப் ஆனது. ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இது சர்ச்சையாக உருவானபோது பணத்தை எப்படியாவது திரும்ப தருவதாக எனக்கு தகவல் அனுப்பினார். ஆனால் எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சட்டப்படி இப்பிரச்னையை தீர்க்க முடியும். இந்த போராட்டத்தில் நான் தனி ஆளாக இருக்கிறேன். இவ்வாறு சோனா கூறினார்.
ஏற்கனவே இப்பிரச்னையின்போது பதில் அளித்திருந்த வெங்கட்பிரபு, ‘என் மீது சோனா சொல்லும் புகாரில் உண்மை இல்லை. அவரிடம் பணம் வாங்கவில்லைஎன்று குறிப்பிட்டார். மீண்டும் இப்பிரச்னை எழுந்துள்ளது. ஆனால் வெங்கட்பிரபு மவுனம் காக்கிறார்.
Comments
Post a Comment