21st of April 2014
சென்னை::இந்தி நடிகையாக இருந்தும் தென்னிந்திய சினிமாவில்தான் புகழ் கொடி
நாட்டினார் தமன்னா. இருப்பினும் தனது தாய்மொழியிலும் பெரிய நடிகையாக
வேண்டும் என்று அவர் பல வருடங்களாக எடுத்து வந்த முயற்சியின் பலனாகத்தான்
ஹிம்மத்வாலா என்ற படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். ஆனால்
தமன்னா பெரிதாக எதிர்பார்த்த அந்த படம் தோல்வியடைந்து அவருக்கு பெருத்த
ஏமாற்றத்தை கொடுத்து விட்டது.
இருப்பினும் அதன்பிறகு இரண்டு இந்தி படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவர், தென்னிந்திய சினிமாதான் தனக்கு ராசி என்று மறுபடியும் விட்ட இடத்தை பிடிக்க ஓடோடி வந்தவர் இப்போது தமிழ், தெலுங்கு என இரண்ட மொழகளிலும் படங்களை கைப்பற்றி நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இந்தி படங்களில் நடிக்கிறேன் எனறு சொல்லிக்கொண்டு அடிக்கடி மும்பைக்கும் பறந்து விடுகிறார்.
அவரிடத்தில், இந்தி படங்களில் ரொம்ப நாட்களாக நடித்துக்கொண்டிருக்கிறீர்களே. எப்போது ரிலீசாகிறது? என்று கேட்டால், பாலிவுட்டைப் பொறுத்தவரை ஒரு படத்தை முடிப்பதற்கே இரண்டு வருடமாக்கி விடுவார்கள். தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தினமும் 9 மணிக்கே ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்கள். வந்த உடனேயே வேலைகளை தொடங்கி விடுவார்கள். ஆனால், இந்தியில் அப்படியல்ல, 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால் மதியம்தான் ஸ்பாட்டுக்கே வருவார்கள் அதன்பிறகு கேமராவை ஆன் செய்வதற்கு 2 மணி ஆகி விடும். இதனால்தான் இந்தி படப்பிடிப்புகள் முடிவதற்கு தாமதமாகிறது.
அநத வகையில், பாலிவுட் சினிமாவை விட தென்னிந்திய சினிமாவினர் சின்சியாரிட்டி உள்ளவர்கள். இங்குள்ள ஹீரோக்களான அஜீத், விஜய் போன்றவர்களெல்லாம் 9 மணிக்கே மேக்கப் போட்டு விட்டு கேமரா முன்பு வந்து நிற்பது ரொம்ப ஆச்சரியமாக உள்ளது. தொழில் மீது இவர்கள் கொண்டுள்ள சின்சியாரிட்டி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது என்கிறார் தமன்னா.

’’
Comments
Post a Comment