சிம்பு பட தயாரிப்பாளர் ஹன்சிகா திடீர் மோதல்!!!

12th of April 2014
சென்னை::சிம்பு பட தயாரிப்பாளர் ஹன்சிகா மீது புகார் செய்ததையடுத்து இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.சிம்பு, ஹன்சிகா நடிக்கும் படம் ‘வாலு. இப்பட ஷூட்டிங்கின்போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஷூட்டிங் முடிவதற்குள் காதலை முறித்துக்கொண்டனர். இந்நிலையில் ‘வாலு‘ பட தயாரிப்பாளர் சக்ரவர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் ஹன்சிகா மீது புகார் அளித்துள்ளார்.
 
அதில், ‘ஹன்சிகாவிடம் வாலு படத்தை முடிப்பதற்காக கால்ஷீட் கேட்டபோது தரவில்லை. இதனால் ஷூட்டிங் நடத்த முடியாமல் முடங்கி இருக்கிறது. அவரிடம் கால்ஷீட் பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.இதை அறிந்து ஹன்சிகா அதிர்ச்சி அடைந்தார். அவரது தரப்பில் கூறும்போது,‘வாலு படத்துக்காக கடந்த 2 வருடத்தில் 9 முறை தேதி கொடுத்தும் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
 
கடந்த மே மாதம் மீண்டும் தேதி கொடுக்கப்பட்டது. அப்போதே வேறு படங்களுக்கு ஜூலை மாதம் வரை கால்ஷீட் கொடுக்கப்பட்டிருக்கிறது பற்றி தெரிவிக்கப்பட்டது. ஒப்புக்கொண்ட எல்லா படங்களும் முக்கியம்தான். குறிப்பிட்ட மாதத்தில்தான் கால்ஷீட் வேண்டுமென்றால் ஏற்கனவே கால்ஷீட் பெற்று வைத்திருக்கும் தயாரிப்பாளரிடம்தான் வாலு பட தயாரிப்பாளர்பேச வேண்டும். இதுதொடர்பாக ஹன்சிகா முழுஒத்துழைப்பும் தர தயாராக இருக்கிறார் என்றனர்....
  

Comments