30th of April 2014
சென்னை::வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார்.
குறுகிய காலத்தில் பாரதிராஜா, பாலா, விஜய் என முன்னணி டைரக்டர்களின்
படங்களுக்கு இசையமைத்தவர், திடீரென்று பென்சில் படத்தில் ஹீரோவாக அவதாரம்
எடுத்ததால் இப்போது அவரது இசைக்கூடாரத்தில் பரபரப்பு காணாமல் போய்
விட்டது.
இருப்பினும் சில படங்களுக்கு
இசையமைத்தபடியே நடிப்பையும் தொடர நினைக்கும் ஜி.வி.பிரகாஷ், பென்சில்
படத்தை முடித்து விட்டதால், அடுத்து நயன்தாரா இல்லேன்னா த்ரிஷா என்ற
படத்திலும் நடிக்கிறார். பென்சில் படத்தில், படிக்கிற பசங்களுக்கு ஏதோ
மெசேஜ் சொல்லவரும் அவர், இந்த புதிய படத்தில் இந்த மாதிரியான காதலிதான்
வேண்டும் என்று வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு ஒரு
அட்வைஸ் செய்கிறாராம்.
அது கேட்பதற்கு கசப்பாக
இருந்தாலும், எதிர்காலத்தை வளமாக்கும் அறிவுரையாம். மேலும், இந்த படத்தில்
இரண்டு பெரிய நடிகைகளின் பெயரை டைட்டீலாக பயன்படுத்துவதால், அவர்கள்
இருவரையும் நேரடியாக மரியாதை நிமித்தமாக சந்தித்து, அவர்களுக்கு ஏதாவது
பரிசு கொடுக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்.
அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த சந்திப்பு நடைபெற
உள்ளதாம்..
Comments
Post a Comment