16th of April 2014
சென்னை::சென்னை:‘என்னை நடிக்க கூப்பிடாதீர்கள்' என்று கூறும் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை நம்ப முடியாது என்கிறது கோலிவுட்.இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோக்கள் ஆகிவிட்டனர். இவர்களை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜுக்கு விளம்பர படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை ஏற்றுக் கொண்டார். இதையறிந்த தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தில் ஹீரோவாக நடிக்க ஹாரிசிடம் கேட்டபோது அதை ஏற்க மறுத்துவிட்டார்.
இந்த உறுதி எத்தனை நாளைக்கு' என்று கோலிவுட்டில் முணுமுணுக்கின்றனர். ‘என்ன காரணம்?‘ என்று விசாரித்தபோது, ‘கவுதம் மேனனின் முதல்படமான ‘மின்னலே‘விலிருந்து தொடர்ந்து அவர் படங்களுக்கு இசை அமைத்து வந்தார் ஹாரிஸ். ‘வாரணம் ஆயிரம்‘ படத்திற்கு பிறகு இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இனி இருவரும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தனர். அந்த மோதல் தற்போது நீரில் நனைந்த பட்டாசுபோல் நமத்துப்போய்விட்டது. அஜீத் நடிக்கும் படத்தை கவுதம் மேனன் தற்போது இயக்குகிறார். இப்படத்துக்காக கவுதமுடன் கைகோர்த்திருக்கிறார் ஹாரிஸ். இணைய மாட்டோம் என்று சொல்லிவிட்டு கவுதமுடன் இணைந்திருக்கும் ஹாரிஸ், நடிக்க மாட்டேன் என்று கூறிய வாக்குறுதியில் மட்டும் எப்படி உறுதியாக இருப்பார் என கேள்வி எழுப்புகிறது கோலிவுட் வட்டாரம்......
Comments
Post a Comment