மம்மிக்கு டாட்டா; மகளுக்கு வெல்கம்!!!

24th of April 2014
சென்னை::ஹேமமாலினி ஒப்புக்கொண்ட படத்தில் அவருக்கு பதிலாக மகள் இஷா தியோல் நடிக்கிறார்.பாலிவுட் மாஜி கனவு கன்னி ஹேமமாலினி மகள் இஷா தியோல். 2 ஆண்டுக்கு முன் பரத் தக்தானி என்பவரை மணந்தார். திருமணத்துக்கு பிறகு தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் இஷா. கன்னடத்தில் கிஷன் ஸ்ரீகாந்த் இயக்கும் ‘புட்பாத் 2 என்ற படம் மூலம் கன்னட மொழி படத்தில் அறிமுகமாகிறார்.
 
இந்தி, கன்னடம் என இருமொழியில் உருவாகும் இதில் ஜாக்கி ஷெராப், இயக்குனர் கிஷன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தொடக்கத்தில் இப்படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்க ஹேமமாலினி ஒப்புக்கொண்டிருந்தார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதால் அவர் ஷூட்டிங்கில் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு பதிலாக தற்போது மகள் இஷா தியோல் நடிக்கிறார். அதற்கேற்ப 50 வயது வக்கீல் கேரக்டரை, இளம் வக்கீலாக மாற்ற¤ உள்ளனர். இஷா தியோல் தமிழில் சூர்யா ஜோடியாக ஆய்த எழுத்து படத்தில் நடித்திருக்கிறார்..
 

Comments