உதயநிதியின் அடுத்த நாயகி லட்சுமி மேனன்?!!!

11th of April 2014
சென்னை::உதயநிதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது கதிர்வேலன் காதல் படத்தை தொடர்ந்து உதயநிதி நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜோடியாக நயன்தாரா நடிக்க ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் உதயநிதி. அதில் ஒரு படத்தில்தான் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் லட்சுமிமேனன். இந்த படத்தை இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரனே இயக்கப் போகிறார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தில் ஒரு மாற்றம். வழக்கமாக உதயநிதி படத்துக்கு இசையமைக்கும் ஹாரீஸ் இந்த படத்தில் இல்லையாம். அவருக்கு பதில் அனிருத்துக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாம்..
 

Comments