29th of April 2014
சென்னை::கேடி படத்தில் இலியானாவுடன் இணைந்து நடித்தபடி கோடம்பாக்கத்துக்கு வந்தவர்தான் தமன்னா. ஆனால் அதன்பிறகு இலியானாவுக்கு கோலிவுட் கதவுகள் திறக்காதபோதும் தமன்னாவுக்கு கல்லூரி, வியாபாரி என வரிசையாக படங்கள் புக்காகின. அதனால் மும்பையில் இருந்து வந்து இங்கேயே தங்கி விட்டார் அம்மணி. ஒருகட்டத்தில் தமிழில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து நம்பர் ஒன்னாக இருந்தார்.

ஆனால், தமிழ், தெலுங்கு
என மாறி மாறி நடித்து வந்ததால் அவரால் எந்த மொழியிலும் நிலையான இடத்தை
தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கிடையே ஹிம்மத்வாலா மூலம்
இந்தியிலும் பிரவேசித்ததால், தென்னிந்திய சினிமா மார்க்கெட்டும்
அவுட்டானது. ஆனபோதும், அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்தவர், இப்போது
பாகுபாலி தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அதையடுத்து,
நயன்தாரா நடிக்க மறுத்த ஒரே காரணத்துக்காக ஆர்யாவுடன் பாஸ் என்ற பாஸ்கரன்
படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த நிலையில், தான் எதிர்பார்த்த சில
மேல்தட்டு ஹீரோக்கள் தனக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என்று
எதிர்பார்த்தார் தமன்னா. ஆனால், பல ஆண்டுகளாக நட்பு வளர்த்த நடிகர்கள்
யாருமே அவர் பக்கம் திரும்புவதே இல்லையாம்.
இதனால்
தனது அபிமானத்திற்குரிய சில மேல்தட்டு நடிகர்கள் மீது கடும் அதிருப்தியில்
இருக்கும் தமன்னா, அடுத்தபடியாக இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் நடிப்பதற்கு
வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயாராகி விட்டாராம். அதை தனது உதவியாளர்கள்
மூலம் கோடம்பாக்கத்தில் தண்டோரா போட்டு வருகிறார் தமன்னா.
Comments
Post a Comment