லைப் நம்மளை டிரைவ் பண்றதை விட நாம லைப்புக்கு டிரைவ் பண்ணணும்! -சொல்கிறார் விஷ்ணு!!!

29th of April 2014
சென்னை::திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள படம் முண்டாசுப்பட்டி. இப்படத்தை பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. வெண்ணிலா கபடிக்குழு நாயகன் விஷ்ணு நடித்துள்ள இப்படம் 1980களில் நடக்கும் கதையை மையப்படுத்தி இப்படத்தை இயக்கியிருக்கிறார் புதுமுக இயக்குனர் ராம்குமார். நந்திதா நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
 
அப்போது இப்படம் பற்றி இயக்குனர் ராம்குமார் கூறுகையில், நான் ஏற்கனவே முண்டாசுப்பட்டி என்ற பெயரில் ஒரு குறும்படம் எடுத்திருந்தேன். அதைத்தான் சினிமாவுக்காக திரைக்கதை பெருசுபடுத்தியிருக்கிறேன். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த காலத்து மனிதர்களை கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும், போட்டோ எடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று அந்த காலத்தில் கருதப்பட்டது போன்று, போட்டோ எடுத்துக்கொண்டால் இறந்து விடுவோம் என்றொரு மூட நம்பிக்கை ஒரு கிராமத்தில் இருந்து வருவது போன்று ஒரு கற்பனை கதையை உருவாக்கியிருக்கிறேன்.
 
அப்படிப்பட்ட ஒரு கிராமத்துக்கு போட்டோ கிராபரான கதாநாயகன் செல்கிறான். அங்கு ஒருவரை போட்டோ எடுக்க சென்றபோது அவன் சிறை வைக்கப்படுகிறான். அதன்பிறகு ஏற்படும் குழப்பங்கள்தான் இந்த படம். காமெடியை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் கிராமிய பாடல்களை இணைத்திருக்கிறோம். மேலும் இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவருமே தலையில் முண்டாசுக்கட்டியிருப்பார்கள். அந்த வெள்ளேந்தி மனிதர்களின் மூட நம்பிக்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாக இப்படம் உருவாகியுள்ளது என்றார்.
 
அவரையடுத்து நடிகர் விஷ்ணு பேசுகையில், ஒரு கதை கேட்டதுமே அதைப்பத்தி நாம பீல் பண்ணணும். அதுதான் நல்ல கதையாக இருக்க முடியும். அப்படி நான் இந்த முண்டாசுப்பட்டி கதைய கேட்டதும் என்னை பீல் பண்ண வச்சுது. அதோடு லைப் நம்மளை டிரைவ் பண்றதை விட நாம லைப்புக்கு டிரைவ் பண்ணணும்ங்கிறதையும் இப்பத்தான் நான் புரிஞ்சிக்கிட்டேன்.
 
இந்த படம் என்னை ஒரு முக்கியமான இடத்துக்கு கொண்டு போகும்ங்கிற நம்பிக்கை இருக்கு. கதையோட பீல் மாறக்கூடாதுங்கிறதுக்காக 2 மாதம் ஒரே ஷெட்யூல்டுல படத்தை முடிச்சாங்க. படம் முடிஞ்சு வெளியே வந்தப்ப ஒரு நல்ல படத்துல நடிச்சிருக்கோம் என்ற சந்தோசம் எனக்கு கிடைச்சிருக்கு. அதனால் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறேன் என்றார்..
 

Comments