28th of April 2014
சென்னை::தவழும் குழந்தை முகம்… எப்போதும் ஒவ்வொரு முகங்களிலும் எதையோ தேடும் கண்கள்.. நொடிக்கு ஒரு முக பாவனை காட்டும் அழகு இதுதான் சமந்தா.. தமிழ் ரசிகர்களின் மனதில் ‘பாணா காத்தாடி’விட்டு போட்டியின்றி பறந்துகொண்டிருக்கும் அழகு மயில்.
முன்னணி ஹீரோக்களாகட்டும்.. அல்லது அரசியலாகட்டும் யாராக
இருந்தாலும் தன் மனதில் பட்டதை பளிச்சென்று தைரியமாக சொல்லும் தைரியசாலி நடிகை என்றால் அது சமந்தா ஒருவர்தான். கவர்ச்சியை நம்பாமல் தனது நடிப்பின் மூலம் மட்டுமே முன்னேறி இன்று விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் காணும் சமந்தாவுக்கு பூந்தளிர். தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது..
Comments
Post a Comment