27th of April 2014
சென்னை::ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தயாராக நிற்கும் அனைவருமே ஒருவருக்கொருவர்
போட்டிதான். அந்த வகையில், சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளையுமே
நான் போட்டியாகத்தான்>>
27th of April 2014
சென்னை::ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தயாராக நிற்கும் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டிதான். அந்த வகையில், சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளையுமே நான் போட்டியாகத்தான் கருதுகிறேன். ஒருவரையொருவர் முந்திச்செல்ல வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த். தினமலர் இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டி...
* படங்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறீர்கள்?
முதலில மொத்த கதையையும் கேட்பேன். அதன்பிறகு எனது கேரக்டர் அதில் எந்த மாதிரி வருகிறது என்பதை தெரிந்து கொள்வேன். அதில் பர்பாமென்ஸ் செய்வதற்கு எனக்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்தால், உடனேயே ஒத்துக்கொள்வேன். இல்லையேல், கொஞ்சம் யோசித்து சொல்கிறேன் என்று அந்த படங்களை டீலில் விட்டு விடுவேன். அதனால் இப்போதெல்லாமல் நான் யோசித்து சொல்கிறேன் என்று சொன்னாலே இயக்குனர்கள் புரிந்து கொண்டு வேறு நடிகைகளை புக் பண்ணி விடுகிறார்கள்.
* வாமனன் ப்ரியா ஆனந்துக்கும், வணக்கம் சென்னை ப்ரியா ஆனந்துக்குமிடையே என்ன வித்தியாசம்?
வாமனன் படத்தில் நடித்தபோது நிறைய வேகமும், ஆர்வமும் இருந்தது. ஆனால் இப்போதைய ப்ரியா ஆனந்துக்கு விவேகம் அதிகமாகி விட்டது. அதனால் ஆர்வக்கோளாறில் எந்த விசயத்திலும் எடுத்தோம் கவுத்தோம் என்று இறங்குவதில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு என்ன நடிப்பை கொடுக்க வேண்டுமோ அதை சரியாக கொடுத்து வருகிறேன். அதனால் நடிப்பைப்பொறுத்தவரை இப்போது நல்ல மெச்சூரிட்டியாகி இருப்பதாக கருதுகிறேன்.
* கிளாமர் காட்சிகளில் அளவுகோள் வைத்திருக்கிறீர்களா?
எதுவாக இருந்தாலும் ஒரு லிமிட் வேண்டுமல்லவா? அந்த வகையில், அனைவரும் ரசிக்கும்படியான கிளாமரை ஆரம்பத்தில் இருந்தே நான் வெளிப்படுத்தி வருகிறேன். அதேசமயம் அசைவ நடிகை என்று என்னை யாரும் அருவருப்பாக பார்க்கக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கவர்ச்சி விசயத்தில் கண்ணியத்தை கடைபிடித்து வந்திருக்கிறேன். அது இனிமேலும் தொடரும். மற்றபடி, முத்தக்காட்சிகளில் நடிப்பதெல்லாம் இப்போது சாதாரணமாகி விட்டது. அதனால் எந்த மாதிரியான முத்தக்காட்சிகளில் நடிப்பதற்கும் எப்போதுமே நான் தயார் நிலையில் இருக்கிறேன்.
* ப்ரியா ஆனந்த் ரகளை பேர்வழி என்கிறார்களே அப்படியா?
படப்பிடிப்பு தளத்தில் நான் மூடியாக இருக்க மாட்டேன். மற்றவர்கள் மூடியாக இருந்தாலும் அவர்களிடம் சென்று ஏதாவது ஜாலியாக பேசி சிரிக்க வைத்து விடுவேன். அதோடு, சினிமா உலகில் சாவு சீனில் நடித்தபிறகு அனைவருமே சிறிது நேரம் சிரிப்பதை செண்டிமென்டாக வைத்திருக்கிறாரக்ள. அதேபோல் நான், அழுகை சீனில் நடித்து முடித்ததும், சிறிது நேரம் ஜாலியாக சிரிப்பேன். அதைப்பார்த்து என்னைச்சுற்றியிருப்பவர்களும் தன்னை மறந்து சிரிப்பார்கள். மற்றபடி பெரிய ரகளையெல்லாம் செய்ய மாட்டேன்.
* சமீபகால நடிகைகளில் யாரை போட்டியாக கருதுகிறீர்கள்?
ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தயாராக நிற்கும் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டிதான். அந்த வகையில், சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளையுமே நான் போட்டியாகத்தான் கருதுகிறேன். ஒருவரையொருவர் முந்திச்செல்ல வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது. அதனால் என்னுடன் பயணிக்கும் அனைத்து நடிகைகளையுமே நான் எனது போட்டியாளர்களாகத்தான் நினைக்கிறேன். மேலும், போட்டி இல்லாத வாழ்க்கை எல்லாமே போர்தான்.
* பென்சில் பட வாய்ப்பை உங்களிடமிருந்து ஸ்ரீதிவ்யா அபகரித்துக்கொண்டாராமே?
அந்த படத்தில் நடிக்க முதலில் என்னைதான் கேட்டன
ர். ஆனால், நான் ஒரே நேரத்தில் அதர்வாவுடன் இரும்புக்குதிரை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி, கெளதமுடன் வை ராஜா வை போன்ற படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிக்கயிருந்தேன். அப்போது பென்சில் படத்துக்கும் கேட்டதால் என்னால் கால்சீட் தரமுடியவில்லை. ஆக அந்த பட வாய்ப்பை ஸ்ரீதிவ்யா என்னிடமிருந்து அபகரிக்கவில்லை. நான்தான் அவருக்கு விட்டுக்கொடுத்தேன்.
* எதிர்நீச்சல் டீம் இணையும் டாணா படத்தில் நீங்கள் இல்லையே ஏன்?
எதிர்நீச்சல் படத்தில் நடித்து அப்படம் வெற்றி பெற்றபோது, தனுஷ் தயாரிப்பில் அப்பட டைரக்டர், ஹீரோ சிவகார்த்திகேயன் ஆகியோர் மீண்டும் இணைய திட்டமிட்டனர். அதனால் டாணா என்ற பெயரில் எதிர்நீச்சல் டீம் மீண்டும இணைய தயாரானபோது என்னையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அழைக்கவில்லை. இருப்பினும் நான் கவலைப்படவில்லை. சினிமாவில், கடைசி நேரத்தில் எத்தனையோ படங்கள் கைநழுவிப்போயிருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. அதனால் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொண்டேன்.
* மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாட முயற்சி எடுக்கிறீர்களா?
விஜய், அஜீத், சூர்யா போன்றவர்களை சந்தித்தபோது எனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும் சினிமாவில் அவர்களாக எதையும் முடிவு செய்ய முடியாது. ஒரு கதையை ரெடி பண்ணும்போது அதில் யார் யாரை நடிக்க வைக்கலாம் என்று இயக்குனர்கள்தான் முடிவு செய்வார்கள். அப்போது அவர்களது கதாபாத்திரத்திற்கு நாம் பொருத்தமாக இருந்தால் நடிக்க வைப்பார்கள். அதனால் என்னதான் முயற்சி எடுத்தாலும் கிடைப்பதுதான் கிடைக்கும். அதனால் எதிர்பார்ப்புகளை குறைத்து விட்டு நான் செய்யும் வேலைகளை மட்டுமே திறம்பட செய்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ப்ரியா ஆனந்த்.
Comments
Post a Comment