சூர்யா படத்துக்கு பாடல் எழுத மறுத்த கவிஞர்!!!

 8th of April 2014
சென்னை::சூர்யா நடிக்கும் அஞ்சான் திரைப்படத்திற்கு  கவிஞர் அறிவுமதி பாடல் எழுத மறுத்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், இலங்கை தமிழர்களை கொச்சைபடுத்தி படம் தயாரித்த லிங்குசாமியின் படத்திற்கு பணிபுரிய விரும்பவில்லை என்றும், மேலும் இனம் திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிவன், அஞ்சான் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிவதால் அவர் பணிபுரியும் படத்திற்கு தான் பாடல் எழுத முடியாது என்றும் தெரிவித்தாராம்.
அறிவுமதியும், லிங்குசாமியும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், லிங்குசாமியின் பல படங்களுக்கு அவர் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவருக்கு பதிலாக அந்த பாடலை பா.விஜய் எழுத இருப்பதாக கூறப்படுகிறது....
 

Comments