விஜய்க்கு ‘பில்ட்-அப்’ கொடுத்த, பேரரசுவின் ‘பில்ட்-அப்’ பேச்சு!!!

12th of April 2014
சென்னை::ரஜினிக்கு அடுத்து விஜய் ஒரு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக மாறியதில் இயக்குனர் பேரரசு-க்கு மிக முக்கியப் பங்கு உண்டு.
 
அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘திருப்பாச்சி, சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களும் விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றிக் காட்டின.
அந்த படங்களில் பேரரசுவின் ‘பன்ச்’ வசனங்களும், ஆக்ஷன் காட்சிகளும் விஜய்யை நிறையவே ‘பில்ட்-அப்’ செய்தன. ஆனால், அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பதற்கு விஜய் முதலில் தயக்கம் காட்டினார் என்கிறார் இயக்குனர் பேரரசு.
 
ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தேவன் நடிக்கும் “காதல் பஞ்சாயத்து”படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேரரசு புதுமுக நடிகர் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார்.

முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்டப் பாடலை அறிமுக பாடலாக வைத்து நடிக்கிறார்கள்.முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள், அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும், கொஞ்சம் கொஞ்சம் என்று வளருங்கள்.
 
மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அதுமாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம், இதை வேண்டு கோளாக வைக்கிறேன்.
 
நான் ‘திருப்பாச்சி’ படத்தை இயக்கிய போது விஜய் அக்ஷன் ஹீரோவாகிவிட்ட நேரம் “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு” என்ற பாடலை பதிவு செய்து போட்டு காட்டினோம் அதைக் கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று கேட்டார்.அவரை சமாதானப் படுத்தி நடிக்க வைத்தேன் அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு,”  என்றார் பேரரசு.
 
பேரரசு சொல்றத பார்த்தால் புதுமுக நடிகர்களுக்கு சொல்றத மாதிரி தெரியலையே…?...
 

Comments