ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா- சோனக்ஷி சிங்கா!!!

 8th of April 2014சென்னை::எந்திரன் படத்துக்குபின் ரஜினி நடித்த கோச்சடையான் மே மாதம் வெளியாகிறது. இந்த படம் வெளிவருவதற்குள் ரஜினியின் அடுத்தபடம் குறித்த செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன.
கோச்சடையானுக்கு பின் ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா இயக்குவார் என்று கூறப்பட்டது. சுரேஷ் கிருஷ்ணா கூறிய பாட்ஷா 2 வெற்றி பெறுமா என்ற சந்தேகம் வலுக்கவே அந்த திட்டத்தை ஒத்திவைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகிவிட்டார். பிரியாமணி நடித்த சாருலதா படத்தை இயக்கிய பொன்.குமரன் கதை வசம எழுத திரைக்கதை அமைத்து கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இப்படத்தில் இன்னொரு நாயகி வேடத்துக்கு பாலிவுட் நடிகை சோனக்ஷி சிங்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இப்படத்தின் துவக்கவிழா வருகிற ஏப்ரல் 20-ம் தேதி நடக்க உள்ளதாம். கன்னடத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ...

Comments