6th of April 2014
சென்னை::பாராளுமன்றதேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நக்மா, பாஜக சார்பில் போட்டியிடும் ஹேமமாலினி ஆகியோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என உ.பி. மாநில தேர்தல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடும் நடிகை நக்மாவிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை மனு அனுப்பியது. அதில், மீரட் தொகுதியில் போட்டியிடும் திரைப்பட நடிகை நக்மாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நூற்றுக் கணக்கானோர் வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நக்மாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க தேர்தல் குழு ஒப்புக்கொண்டுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி, மீரட்டில் பிரச்சாரத்திற்குச் சென்ற நக்மாவை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால், கோபத்திற்கு உள்ளான நக்மா, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தார். இதைத் தொடர்ந்து, அவரின் பாதுகாப்பை அதிகரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.
இதேபோல், மதுரா தொகுதியில் போட்டியிடும் ஹேமமாலினிக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
Comments
Post a Comment