மும்பையில் இன்று வாக்கு பதிவு தேர்தலில் ஓட்டு போடாத பாலிவுட் நடிகர், நடிகைகள் அமெரிக்கா நிகழ்ச்சியில் பங்கேற்பு!!!

24th of April 2014
சென்னை::நாடாளுமன்றத்துக்கு 6வது கட்டமாக இன்று நடக்கும் தேர்தலில், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ஓட்டளிக்கவில்லை. அமெரிக்காவில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர்
நாடாளுமன்றத்துக்கு 6வது கட்டமாக இன்று நடக்கும் தேர்தலில், பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ஓட்டளிக்கவில்லை. அமெரிக்காவில் நடக்கும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பலர் சென்றுள்ளனர். அவர்களுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத்துக்கு 6வது கட்டமாக 11 மாநிலங்களை சேர்ந்த 117 தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள தெற்கு, வடகிழக்கு, மத்திய வடக்கு, வடக்கு உள்பட 6 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், பாலிவுட் பிரபலங்கள் பலர் தேர்தலில் ஓட்டளிக்கவில்லை. அமெரிக்காவில் இந்திய திரைப்பட அகடமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பங்கேற்க பெரும்பாலான நடிகர், நடிகைகள் சென்று விட்டனர்.அனில் கபூர், ஷாகித் கபூர், ஹிருத்திக் ரோஷன், சயீப் அலிகான் மற்றும் கரீனா கபூர் உள்பட பலர் அமெரிக்காவுக்கு சென்று விட்டதால் ஓட்டளிக்கவில்லை. இதேபோல் முன்னாள் எம்.பி. ஷபனா ஆஸ்மி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகியோரும் வாக்களிக்க வரவில்லை.
 
ஜாவேத் அக்தரின் மகன் பர்ஹான் அக்தர் மட்டும் வாக்களித்துவிட்டு சென்றிருக்கிறார். அமிதாப்பச்சன் குடும்பத்தினர், ஆமிர்கான் மற்றும் ஷாரூக்கான் ஆகியோர் மும்பையில் உள்ளதால் வாக்களிப்பார்கள் என்று கூறுகின்றனர்.மும்பையில் உள்ள வாக்கு சாவடியில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் வாக்களித்தார். Ôநாட்டில் மாற்றத்தை உண்டாக்க, வாக்களிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நாளை யாராவது என்னிடம் வாக்களித்தாயா என்று கேட்டால், எனது விரலை காண்பிப்பேன் என்று வித்யா பாலன் கூறினார்.இந்தியாவில் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றாமல், அமெரிக்காவில் நடைபெறும் விருது நிகழ்ச்சிக்கு சென்ற பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. நானும்தான் அமெரிக்காவில் நடக்கும் விருது நிகழ்ச்சிக்கு செல்கிறேன். ஆனால், வாக்களித்து விட்டுதான் செல்கிறேன் என்றார்.மும்பை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவும் அவருக்கு எதிராக ஆம் ஆத்மியின் மீரா சன்யாலும் போட்டியிடுகின்றனர். மும்பை வடகிழக்கு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சஞ்சய் பாட்டீலும், பா.ஜ.வின் சார்பாக கிரீத் சோமையாவும், ஆம் ஆத்மி சார்பாக பிரபல சமூக சேவகர் மேதா பட்கரும் போட்டியிடுகின்றனர். மும்பை வடமத்திய தொகுதியில் காங்கிரஸ் சார்பாக சுனில் தத்தின் மகள் பிரியா தத்தும், பா.ஜ. சார்பாக பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜனும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Comments