கோச்சடையான் படத்தின் ரிலீசுக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதி!!!

21st of April 2014
சென்னை::கோச்சடையான் படத்தின் ரிலீசுக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி விட்டது. ஆனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அனிமேஷன் படத்தில் நடித்த ரஜினி, மீண்டும் கடினமான கதையம்சம் கொண்ட கதைகளில் நடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வந்தவண்ணம் உள்ளன.

இந்த நிலையில், ராணா படத்தின் கதையை முத்து, படையப்பா பாணியில் கே.எஸ்.ரவிக்குமார் மாற்றி விட்டதாக கூறுகிறார்கள். அந்த படங்களில நடித்தபோது இருந்த ரஜினி மாதிரி இப்போதுள்ள ரஜினி இல்லை என்பதால், அவரது மூவ்மெண்டை விட கேமராக்களுக்கு அதிக மூவ்மெண்ட் கொடுக்கப்போகிறார்களாம்.

குறிப்பாக, அவரது உடல் அசைவுகளை குறைத்து விட்டு, முகபாவணை நடிப்புக்கு கூடுதல் முக்கியத்தும் தருகிறார்களாம். அந்த வகையில் இப்போதுள்ள டெக்னாலஜியைக்கொண்டு திரையில் பழைய ரஜினியை அப்படியே கொண்டு வந்து விடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
 

Comments