21st of April 2014
சென்னை::ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கும் அண்ணனைப்போல பெரிய நடிகராக வேண்டும் என்று
ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கும் அண்ணனைப்போல பெரிய நடிகராக வேண்டும் என்று ஆசை. டி.வி.நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் அறிமுகமானர். அந்த படம் வெற்றி அடையாததால் சத்யாவும் வெளியே தெரியாமல் போனார். அதன் பிறகு ராட்டினம் தங்கசாமி தயாரித்து இயக்கும் எட்டுதிக்கும் மதயானை படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் வெளிவருவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் தன் சொந்த தயாரிப்பு மூலம் தம்பியை ஹீரோவாக்க முடிவு செய்த ஆர்யா தனது தி ஷோ பீப்பிள் நிறுவனத்தின் மூலம் அமரகாவியம் படத்தை தயாரித்து அதில் தம்பியை நடிக்க வைத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி அறிமுகமான நான் படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர் அமரகாவியத்தை இயக்கி உள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டநிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர் படம் பற்றி கூறியதாவது:
இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டநிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜீவா ஷங்கர் படம் பற்றி கூறியதாவது:
சினிமா கண்டுபிடித்த காலத்திலிருந்தே அது காதலை பேசி வருகிறது. காதல் ஒரு நூல் இழை மாதிரி அதை நெய்பவர்களை பொறுத்து அழகாக மாறும். நானும் அந்த காதலை என்னால் முடிந்த அளவிற்கு அழகுபடுத்தி இருக்கிறேன். இதுவரை படப்பிடிப்பு நடந்திராத பகுதிகளை தேர்ந்தெடுத்து படமாக்கி இருக்கிறேன். ஒரு ஒளிப்பதிவாளராக நான் இடங்களை தேர்வு செய்து படம் பிடித்திருக்கிறேன். அமரகாவியம் எல்லோருடைய காதலையையும் மீட்டுத் தருகிற படமாக இருக்கும். என்கிறார் ஜீவா ஷங்கர்.
தம்பி சத்யாவுக்கு காதல் பயிற்சி கொடுத்த ஆர்யா!
டி.வி நடிகர் விஜய் ஆதிராஜ் இயக்கிய புத்தகம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் சத்யா. இவர் நடிகர் ஆர்யாவின் தம்பி ஆவார். அந்த படம் தம்பிக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த ஆர்யா, அப்படத்தின் ஆடியோ விழாவுக்கு வந்தபோது, ஆக்ஷன் காட்சிகளில் சத்யா புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு காட்சியில் வில்லன் மீது ஒரு பஞ்ச் கொடுத்துவிட்டு அவர் நிற்பதைப்பார்த்து நானே அசந்து விட்டேன். 15 படங்களில் நடித்துள்ள நானே செய்திராத ஒரு ஆக்சனை என் தம்பி செய்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது என்று மேடையில் பேசினார் ஆர்யா.
ஆனால், அப்படி தம்பியைப்பற்றி பெரிய பில்டப் கொடுத்து, அந்த படத்தை பெரிதாக எதிர்பார்த்திருந்த ஆர்யாவுக்கு அந்த படத்தின் தோல்வி அதிர்ச்சியை கொடுத்தது. அதோடு சத்யாவின் நடிப்பை யாருமே பெரிதாக சொல்லவில்லை. அதையடுத்து, தனது நட்பு வட்டார டைரக்டர்களிடம் தம்பியை ஆதரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார் ஆர்யா. ஆனால், யாருமே அவரது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை.
அதனால், இப்போது தி ஷோ பீப்பிள் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலமே தம்பி சத்யாவை மீண்டும் ஹீரோவாக்கியிருக்கிறார் ஆர்யா. இந்த படத்தை விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா ஷங்கர் இயக்குகிறார். அமரகாவியம் என்ற பெயரில் உருவாகும் இப்படம் காதலை மையப்படுத்தி தயாராகிறதாம்.
ஆனால், இந்த முறையும் தம்பி நடிப்பில் சோடை போய் விடக்கூடாது என்பதற்காக, அவர் நடிக்க வேண்டிய ஸ்கிரிப்ட் பேப்பரை முன்கூட்டியே வாங்கி, தனது வீட்டில் வைத்து சத்யாவுக்கும், அவருக்கு ஜோடியாக நடிக்கும் மியா ஜார்ஜ்க்கும் சேர்த்து நடிப்பு பயிற்சி கொடுத்தாராம் ஆர்யா. ஆக, அண்ணன் மியா ஜார்ஜை கட்டிப்பிடித்து காதல் கலாசாரத்தை கற்றுக்கொடுப்பதை பலமுறை ரிகர்சல் பார்த்த பிறகு, அதே மியா ஜார்ஜை தானும் கட்டிக்கெண்டு காதல் பாடம் பயின்றாராம் சத்யா.

Comments
Post a Comment