28th of April 2014
சென்னை::கதை இல்லாமல் கூட ஷூட்டிங் கிளம்பிவிடுவார்கள்.. வசனத்தைக்கூட படப்பிடிப்பு தளத்திற்கு போன பின்னாடி எழுதுவார்கள்.. ஆனால் ஹீரோ இல்லாமல் ஒருவர் ஷூட்டிங் கிளம்பினார் என்றால் அது ‘கலர் கண்ணாடிகள’ படத்தின் இயக்குனர் கே.ர.ராகுலாகத்தான் இருக்கும்.
ஷூட்டிங் நடைபெற்ற இடத்தில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அஸ்வின் சற்றே லட்சணமாக இருக்க, இப்போது ஹீரோவாக நடிக்கும் அவரை மற்றவர்கள் வேடிக்கை பார்க்கும் இடத்துக்கு வந்துவிட்டார். கதாநாயகியாக திவ்யாஸ்ரீதரன் நடிக்கிறார்.
இளையகம்பன் எழுதிய பாடல்களுக்கு இனியவன் இசையமைக்கிறார். இந்த்ப்படத்தின் இயக்குனர் ராகுல் ‘நளனும் நந்தினியும்’ உட்பட சில படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடிகராக வலம் வந்தவர். இவரை இயக்குனராக்கி அழகு பார்த்திருக்கிறார் தயாரிப்பாளர் வீர விஸ்வாமித்திரர்.
Comments
Post a Comment