13th of April 2014
சென்னை::ஜோதிகா வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார். அதனை தொடா்ந்து ‘குஷி’, ‘ரிதம்’, ‘தெனாலி’, ‘தூள்’, ‘காக்க காக்க’, ‘திருமலை’, ‘மன்மதன்’, ‘சந்திரமுகி’, ‘ஜில்லுனு ஒரு காதல்‘ ‘மொழி’ என பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு முன்னணி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் ஜோதிகாவும், சூர்யாவும் காதலிக்க ஆரம்பித்தனர். பின்பு 2006–ம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஆனாலும் தொடர்ந்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்த போதும் நடிக்க முன் வரவில்லை.இரண்டு குழந்தைகளை கவனிப்பதில் முழு கவனம் செலுத்தி வந்தார். தற்போது திடீரென ஜோதிகா மீண்டும் நடிக்கலாம் என முடிவு செய்திருப்பதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.
இதனிடையில் சிலமாதங்களுக்கு முன் நிருபர்களுக்கு பேட்டியளித்த சூர்யா,
சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று ஜோதிகாவை நான் நிர்ப்பந்திக்கவுமில்லை, கட்டாயபடுத்தவும் இல்லை என்று கூறினார். குடும்பத்தினருடனும், குழந்தைகளுடன் குதுகாலத்துடன் நேரத்தை செலவிட இருப்பதற்காகவே, அவரே சினிமாவை விட்டு விலகி இருக்க முடிவு எடுத்துள்ளார். இருந்த போதிலும் நல்ல கதையசம் கொண்ட படம் அமைந்தால் மீண்டும் நடிக்க இருப்பதாக முடிவு எடுத்துள்ளார்.

சொந்த பட நிறுவனத்தின் பெயரில் தற்போது சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் தயாரில் உருவாகும் இந்த படத்தை ஹரி இயக்குகிறார். இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார். ஜோதிகா முழு படத்திலும் தோன்றி வலம் வர இருக்கிறாரா? அல்லது சில சீன்களில் மட்டும் களம் இறக்குகிறாரா? கவுரவ தோற்றத்தில் தலைகாட்டி நடிக்க போகிறாரா என்பது பற்றி தகவல்கள் உறுதியாக தெரியவில்லை என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்போம்.
Comments
Post a Comment