வாலு படம் பல்வேறு பிரச்சனைகளினால் நிருபர்களை அலைகழித்த சிம்பு!!!

20th of April 2014
சென்னை::பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு, சிம்பு மீது எப்போதும் ஒரு அதிருப்தி உண்டு. காரணம் அவர், தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொள்ள மாட்டார் என்பது தான். அதை உண்மையாக்குவதுபோல் சமீபத்தில் நடந்த சம்பவம் இது...!
 
சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த வாலு படம் பல்வேறு பிரச்சனைகளினால் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. படமே ட்ராப்பாகும் சூழ்நிலை ஏற்பட்டது. கடைசியில் எப்படியாவது படத்தை முடித்து வெளியிட முடிவு செய்தார் தயாரிப்பாளர். பாடல்காட்சி வெளிநாட்டில் படமாக்கப்படவிருக்கிறது. அதற்கு முன் வாலு படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய நினைத்த தயாரிப்பாளர், இது பற்றி சிம்புவிடம் பேச, முதல்கட்டமாக அத்தனை எப்.எம். ரேடியோ நிருபர்களையும் தன் வீட்டுக்கு வரச்சொல்லி இருக்கிறார். சிம்பு சொன்ன நேரத்தில் அவர் வீட்டில் குவிந்தனர் எப்.எம். ரேடியோ நிருபர்கள்.
 
சிம்பு வீட்டின் காவலாளியோ, உங்களை யார் வரச்சொன்னது? சிம்பு தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னதோடு, எப்.எம். ரேடியோ நிருபர்களை வீட்டின் உள்ளேயே அனுமதிக்க வில்லையாம். சிம்பு வீட்டு வாசலில் காத்திருப்பதை வாலு படத்தின் தயாரிப்பாளருக்கு தெரிவித்திருக்கின்றனர் எப்.எம். ரேடியோ நிருபர்கள். சுமார் மூன்று மணி நேரம் கழித்து சிம்புவிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. இப்ப மூட் இல்லை..நாளைக்கு வாங்க பாக்கலாம்! என்பதே சிம்பு அனுப்பிய தகவல்.
 

Comments