22nd of April 2014
சென்னை::குத்துச்சண்டையை இழிவுப்படுத்தியதாக, திரைப்பட இயக்குனர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ், திருக்குமரன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் மீது,
போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்தவர்
கிருஷ்
ணமூர்த்தி, 38. தெற்கு ரயில்வே ஊழியரான அவர், போலீஸ் கமிஷனர்
அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு: அண்மையில் வெளிவந்துள்ள, 'மான்
கராத்தே' திரைப்படத்தில், குத்துச் சண்டையை இழிவுப்படுத்தி காட்சிகள்
எடுக்கப்பட்டுள்ளன.
இதனால் குத்துச்சண்டை வீரர்களின் மனம் புண்பட்டுள்ளது.
படத்தை தயாரித்த ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர்
சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது..

Comments
Post a Comment