2nd of April 2014
சென்னை::தாலாட்டும் குரலுக்கு சொந்தக்காரர் தான் பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன். இப்போது இவரது மகள் உத்ராவும் பின்னணி பாட களம் இறங்கிவிட்டாள் என்பதுதான் ஹாட் நியூஸ். ஏ.எல்.விஜய் இப்போது ‘சைவம்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் இல்லையா..? அதில் தெய்வத்திருமகள்’ சாரா முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் இல்லையா..?

படத்தில் அவருக்கு பின்னணி பாடுவதற்காக பல மழலைக்குரல்களுக்கு வலைவீசி தேடினார்கள் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷும் இயக்குனர் விஜய்யும்.. கடைசியில் தேடப்போன மூலிகை அருகில் கிடந்தது என்பது போல உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ராவின் குரல் படத்தில் சாரா பாடும் பாடலுக்கு அப்படியே பொருந்திவிட்டதாம்..
அழகே அழகே’ என்ற அந்தப்பாடல் மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும்.. இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றிபெற்ற படங்கள்.. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல’ என்று பெருமை பொங்கக் கூறுகிறார் இசை அமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்.
இந்த ‘அழகே அழகே ‘ பாடலின் டீஸர் நேற்று வெளியிடப்பட்டது. சைவம்’ படத்தின் இசை உரிமையை பெற்றுள்ளது சோனி மியூசிக் நிறுவனம்.’ இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. ....
Comments
Post a Comment