18th of April 2014
சென்னை::பொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள்.
ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின்.
படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில்
ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி
விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
படத்தின் கதை களம் கோவை. சென்னை மாதிரி அதுவும் வளர்ந்த நகரம் அங்கு
மார்டன் டிரஸ்களில் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். அப்படி ஒரு பெண்ணாக
நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். மார்டனான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. அதே
நேரத்துல நம்ம ஊர் சாயல் இருக்கணும். அதுக்கு ஸ்ருதி தான் சாய்ஸ்னு முடிவு
பண்ணி கதை சொன்னோம் உடனே ஓகே சொல்லிட்டாங்க.
வழக்கமான
என்னோட படம் மாதிரி இல்லாம இதுல கொஞ்சம் மார்டனா லவ் போஷன் இருக்கும்.
ஹீரோவோடு ரொமான்ஸ், டுயட்டுன்னு இல்லாம படம் முழுக்க ஸ்ருதிக்கு வேலை
இருக்கு. அவ்வளவு முக்கியமான கேரக்டர். படத்தோட கதை கோவையில் ஆரம்பித்து
பீகார்ல முடியும். நாட்டுல இப்ப இருக்குற ஒரு முக்கியமான பிரச்னையை
எதிர்த்து ஹீரோ போராடுகிற கதை. அதை என்னோட பாணியில் பேமிலி செண்டிமெண்டோடு
சொல்கிறேன். 7 வருஷத்துக்கு முன்பு விஷாலுடன் தாமரபரணி பண்ணினேன். அப்போ
அவர் ஆக்ஷன் ஹீரோவா மட்டும் இருந்தார். இப்போ பெர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாவும்
வளர்ந்திருக்கார். இரண்டுக்குமே பூஜையில் வேலை இருக்கு என்கிறார் ஹரி.

Comments
Post a Comment